பெங்களூரு மார்ச், 19
பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR புட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடங்களுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர் 54 அடி நீளமான தோசையே உலகின் நீளமான தோசையாக சாதனைப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது.