கீழக்கரை மார்ச், 2
கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும் இந்த தரமற்ற சிமிண்ட் மூடிகளை போடுவதால் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்து பள்ளம் ஏற்பட்டு அந்த வழியில் செல்லும் பள்ளி மாணவர்கள்,பெரியவர்கள் என அனைவரையும் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக நமது வணக்கம் பாரதம் இதழில் அவ்வப்போது சுட்டிக்காட்டியும் வருகிறோம்.பெயரளவில் கண் துடைப்புக்காக பணி செய்யாமல் மக்களின் பாதுகாப்பையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு தரமான வாறுகால் மூடி போட வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.
தற்போது புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் மற்றும் தீனியா மெட்ரிக் பள்ளி மைதானத்தின் நுழைவு வாயில் அருகே வாறுகால் மூடி உடைந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்