Spread the love

மதுரை பிப், 24

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான கடந்த இரண்டு மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதிய சங்கத்தினர் இணைந்து கடந்த 14ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதிவாளரோ, துணைவேந்தரோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள், சான்றிதழ் வழங்கும் பணிகள், தினசரி வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் மாணவ மாணவிகள் சான்றிதழ் பெற காலதாமதம் ஆகிறது. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பும் தள்ளிப் போகிறது.

மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர் சங்கத்தினர் அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *