சென்னை பிப், 20
தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ம் ஆண்டுக்கான திமுக அரசியல் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது இதனால் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 38,904 கோடி ஒதுக்கப்பட்டது.