புதுடெல்லி பிப், 19
முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வருவதாக குறிப்பிட்ட என்எம்சி இதேநிலைத் தொடர்ந்தால் அபராதம், மருத்துவ இடங்கள் குறைப்பு, மாணவர் சேர்க்கைக்கு தடை போன்ற நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவ கல்வி நிறுவனங்கள் எச்சரித்துள்ளது.