ராமநாதபுரம் பிப், 14
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக குறைதீர்க்க நாள் கூட்டரங்கில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி கடன் பெற விரும்பும் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்து இம்முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.