விழுப்புரம் பிப், 12
கடந்த அதிமுக ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு காவல் இயக்குனர் ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது. இத்தீர்ப்புக்கு பின் அவர் இன்றே கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.