சென்னை ஜன, 30
தமிழகத்தில் நாளை மற்றும் பிப்ரவரி இரண்டாம் தேதி தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.