சென்னை ஜன, 30
இன்று முதல் தென் மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வழித்தடங்களில் 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும். எனவே கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.