கீழக்கரை ஜன, 23
நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்காக இந்தியா முழுவதும் ஒன்றிய அரசுத்துறை நிறுவனங்களுக்கு காலை முதல் நண்பகல் 2.30 மணி வரை விடுமுறை என பாஜக அரசு அறிவித்தது.
அதன் எதிரொலியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்டவைகள் திறக்கப்படாமல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல் முழுமையாக மக்களை சென்றடையாததால் வழக்கம் போல் காலையில் இருந்து சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வங்கி இப்ப திறக்கும் அப்ப திறக்குமென காத்திருந்தனர்.
ஸ்டேட் பாங்கில் மட்டும் விடுமுறைக்கான காரணத்தை தகவல் பலகையில் ஒட்டியிருந்தனர்.மற்ற வங்கிகளிலும் இப்படி நோட்டீஸ் போட்டிருந்தால்… மக்கள் நேற்று காலை முதல் நண்பகல் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் எழாது. இனிவரும் காலத்தில் வங்கிகள் மக்களை அலைக்கழிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.