கீழக்கரை ஜன, 23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆளும் திமுக வசமிருந்தும் தேர்தல் நேரத்தில் கொடுத்த 8 வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் குண்டும் குழியுமான சாலைகள், தரமற்ற வாறுகால் மூடிகளால் ஏற்படும் விபத்துகள்,எரியாத மின் விளக்குகள் என ஏகப்பட்ட குறைகளோடு நகராட்சி நிர்வாகம் மக்களின் கோபத்தில் இருப்பதால் சமூக வலை தளங்களில் அடிப்படை வசதியில்லாத கீழக்கரையை கிராமம் என விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து நமது வணக்கம் பாரதம் இதழிலும் சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது கீழக்கரை அரசு மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலை திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில் கீழக்கரையை ஊராட்சி என விளம்பரப்படுத்தியுள்ளதால் மக்களின் கிராமம் என்ற குற்றச்சாட்டு உண்மைதானோ? என பார்ப்பவர்களின் புருவத்தை உயர்த்துகிறது.
இதுகுறித்த விமர்சனம் வாட்சப், முகநூல்களில் வேகமாக பரவி வருகிறது.இதைப்பற்றி நகர் திமுக கவுன்சிலர் ஒருவர் கூறும் போது, “கல்வெட்டில் தவறுதலாக நகராட்சிக்கு பதிலாக ஊராட்சி என எழுதப்பட்டு விட்டது. விரைவில் திருத்தம் செய்யப்படும்” என்றார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.