திருப்புல்லாணி ஜன, 17
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
SDPI கட்சி மாநில துணை தலைவர் அப்துல்ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர், மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அரூசி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கீழக்கரை முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல் நன்றி கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல்,பொருளாளர் ஹசன் அலி, மா.து.தலைவர் சோமு,மு.மா.தலைவர் அப்துல் வஹாப், தொழில்சங்க மாவட்ட செயலாளர் இஜாஸ்,மா. பொருளாளர் முஸ்தாக், கிழக்கு ஒன்றிய செயலாளர் பீர்முகைதீன்,இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அக்பர் அலி,கீழக்கரை நகர் செயலாளர் காதர், ரீகான், பக்ருதீன், தாஜூல் அமீன், சாதிக் அலி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் பொங்கல் வைத்து அனைவருக்கும் பகிர்ந்து தங்களின் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்//ராமநாதபுரம்.