பரமக்குடி ஜன, 17
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் காணும் பொங்கல் நாளையொட்டி கோகுல யாதவ இளைஞர் பேரவை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
தவளை போட்டி,பானை உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் சிறுவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
இப்பொங்கல் கொண்டாட்ட விளையாட்டு போட்டிகளை இளைஞர் சங்க பொறுப்பாளர் கலைபாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார். கிராம தலைவர் ராமன், பரமக்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சரயு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்/ராமநாதபுரம்.