கேரளா ஜன, 15
சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழாநடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள பொன்னம்பலமேடு பகுதியில் ஏற்றப்படும் மகர விளக்க தீபராதனையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் மற்றும் அதன் வளாகத்தில் திரண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் நகைகள், திரளான பக்தர்களுடன் மலை கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இன்றைய தினம் திருவாபரணம் சுவாமி ஐயப்பனுக்கு அலங்கரிக்கப்பட்டு மாலையில் சன்னதியில் வழக்கமான மகா தேவாரதனை நடைபெறும்.
மேலும் சபரிமலையில் இன்று நடைபெறும் மகர விளக்கு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 80 லட்சம் பிஸ்கட்டுகள், மருத்துவ குடிநீருடன் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது இன்று காலை 11:30 மணியுடன் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.