கீழக்கரை ஜன, 9
மக்களுடன் முதல்வர் என்னும் திட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஏற்பாட்டில் நேஞ காலை 9.30 மணிக்கு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இத்திட்ட முகாமை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா(எ)முத்துராமலிங்கம், கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான், ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுஐபு, நகர்மன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
மேலும் இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம், இ சேவை, காவல்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் இருக்கை அமர்த்தப்பட்டு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்.
ஒரு பெண் நம்மிடம் கூறுகையில், “மகளிர் உரிமை தொகைக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு நடைபெற்ற முகாமிலும் மனு கொடுத்தேன் நான்கு முறை முயற்சித்தும் இதுவரை எந்த அதிகாரியும் உரிய விளக்கமோ? தீர்வோ சொல்லவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.
முகாம்களும்,மனுக்கள் பெறுவதும் வெறும் கண்துடைப்பாக இருக்க கூடாது என்பதே சமூக நல ஆர்வலர்களின் கவலையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.
ராமநாதபுரம்.