Spread the love

முதுகுளத்தூர் ஜன, 8

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு பரிசளிப்பு விழா 06.01.2024 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி எம்.எம்.கே.எம். காதர் முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் 1929 ம் ஆண்டு பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஏற்படுத்தப்பட்டு நூற்றாண்டை காண இருப்பது, இந்த பகுதியின் பழமையான வரலாறு, இந்த பள்ளிக்கூட விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

மேலும் 1961ம் ஆண்டு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் அறிஞர் அண்ணா பங்கேற்ற பல்வேறு அரிய பல தகவல்களை தெரிவித்தார்.

சென்னை கிளை ஜமாஅத் தலைவர் ஏ. நஜீம் அகமது, மதுரை கிளை ஜமாஅத் தலைவர் எம்.ஐ. ராஜா முகம்மது, திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஜபருல்லா கான், முஸ்தபாபுரம் ஜமாஅத் தலைவர் செய்யது இபுறாகீம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் எம். முகம்மது யாக்கூப், பள்ளிவாசல் நர்சரி & பிரைமரி பள்ளி தாளாளர் எஸ்.என். பைசல் முகம்மது, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் என். அமீருல் ஹக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என்.கே.எம். சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் செய்யது மூமின் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் முன்னாள் தலைவர் முஹம்மது இக்பால், முன்னாள் கல்விக்குழு தலைவர் காதர் முகையதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் ஹாஜி காதர் முகைதீன் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.எம்.என். அஹமது ஹுசைன் ஆலிம், முன்னாள் தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசகர் முதுவை ஹிதாயத், ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது உள்ளிட்டோரும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *