சென்னை டிச, 24
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு டிசம்பர் 29ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.