சென்னை டிச, 12
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 12ம் தேதிக்கான பயணத்திற்கு இன்றும், 13ம் தேதி பயணத்திற்கு நாளையும் முன் பதிவு செய்யலாம். பொங்கல் நெருங்கும்போது டிக்கெட் முன்பதிவு அதிகமாக இருந்தால் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்குவதை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.