புதுடெல்லி நவ, 20
தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் பேரவையில் நிறைவேற்றியது. அதோடு நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சட்ட வல்லுனர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்பு உள்துறை அமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.