ராமநாதபுரம் நவ, 19
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயணசுங்கர் கூறிய போது, 2024 பிப்ரவரி மாதம் பாம்பன் பாலத்தை மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார். மேலும் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி புதிய ரயில் பாதை பணிகள் நடந்து வருவதாகவும் நாராயணன் கூறினார்.