கீழக்கரை நவ, 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கொண்ட பெரிய ஊரில் அதிமுக நிர்வாகி பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் தலையீடு செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் புதுகிழக்குத்தெரு பகுதியில் தனியார் வீட்டின் மேல்தளத்தில் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டனர். வீட்டின் உரிமையாளர் ஆளும் திமுக தரப்பை சேர்ந்தவர் என்பதால் தமது செல்வாக்கினை பயன்படுத்தி செல்போன் டவர் அமைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களோடு SDPI கட்சியினரும் போராடி வருகின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து அரசியல் செய்ய வேண்டிய எதிர்கட்சியான கீழக்கரை அதிமுக நிர்வாகம் வாய் மூடி மௌனித்து வருகிறது.
பராமரிப்பு மேற்கொள்ளப்படாத அம்மா உணவகம் மேற்கூரை, வார்டு குளறுபடி, தரமற்ற சாலைகள், தீர்க்கப்படாத சாக்கடை பிரச்சினைகள் என மக்களுக்கு தேவையான எத்தனையோ அடிப்படை பிரச்சினைகள் இருந்தும் இவைகள் குறித்து அதிமுகவினர் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஆளும் கட்சியின் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்யவேண்டிய எதிர்கட்சி அதிமுக மௌனிப்பது ஏன்? என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.
கீழக்கரை நகர்மன்றத்தில் 10 வது வார்டு கவுன்சிலராக பவித்ரா வெற்றி பெற்றும் அவர் கூட முக்கிய விசயங்களில் வாய் திறக்காமல் மௌனிப்பது,அதிமுகவின் மீது மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
செயல்படாத கீழக்கரை அதிமுக நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகம் அமைக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி./மாவட்ட நிருபர்.
கீழக்கரை.