கோயம்புத்தூர் ஆகஸ்ட், 21
கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகளும், 8 பயனாளிகளுக்கு ரூ.38,968 செலவில் விலையில்லா சலவை எந்திரங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.4.86 லட்சத்தில் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
இவைதவிர மகளிர் சுய உதவி குழுக்கள், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்பட மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 51 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 24 ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் மாபெரும் அரசு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.