ராமேஸ்வரம் அக், 15
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடம் உட்பட 15 மீனவர்கள் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு படகு அதிலிருந்து 15 மீனவர்களை சிறை பிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மேலும் மூன்று படகுகள் 13 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.