சிவகங்கை அக், 1
கீழடியில் ஒன்பதாம் கட்ட அகலாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கீழடி எட்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் தமிழரின் நாகரீகத்தை அறியும் வகையில் பல்வேறு பழமையான தொல்பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒன்பதாம் கட்ட பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்பாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.