Spread the love

கடலூர் ஆகஸ்ட், 20

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா பழக்கத்தால் தன்னிலை மறக்கும் நபர்களால், சிறு சிறு பிரச்சினைகளும், கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக அங்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தான் அதிகளவில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையாகிறது. இதனால் தான் அங்கு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர். தொலைபேசி எண் அறிமுகம் அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க 74188 46100 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதில் வாட்ஸ்-அப் மூலமாக போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களையும் வீடியோக்களையும் அனுப்பலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *