கீழக்கரை செப், 23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமுதாய கூடத்தை இன்று காலை 11.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்.
கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் தாம் இந்த பகுதிக்கு பரப்புரை செய்ய வந்த போது முத்துச்சாமிபுரம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி கொடுத்தேன். இன்று அதை நிறைவேற்றி எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இதே போன்று ஒட்டுமொத்த கீழக்கரை மக்களின் நீண்ட கால கோரிக்கையான வாறுகால் கழிவு நீர் திட்டத்தையும் விரைவில் நிறைவேற்றி தருவதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் அருள், சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் மகசூக்பானு, கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள்,நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.