கீழக்கரை செப், 23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை ஆகியவற்றின் சார்பாக மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகள் பற்றிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் தீயணைப்பு துறை தலைமை அதிகாரி அருள்ராஜ் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு தீயணைப்பான்களை பயன்படுத்தும் விதம் பேரிடர் காலங்களில் தீ விபத்தின் போது துரிதமாக செயல்படும் முறை மற்றும் தீக் காயத்திற்கான முதலுதவி ஆகியவை குறித்து செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலைமான் மற்றும் சதாம் உசேன், முனிய சத்தியா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.