கீழக்கரை செப், 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான 1.25 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவிடம் இன்று காலை 11.45 மணியளவில் ஒப்படைத்தார்.
நகராட்சி ஆணையர் செல்வராஜ்,பொறியாளர் அருள்,நகர்மன்ற உறுப்பினர்கள் ஷர்ஃப்ராஸ் நவாஸ்,பாதுஷா,நமது KLK வெல்ஃபேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம்,கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகி அபுபக்கர் சித்தீக்,இஃப்திகார்,மூர் ஜெய்னுதீன் ஆகியோர் அருகில் இருந்தனர்.
கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ள 1.5 ஏக்கர் நிலத்தை சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட உபயோகப்படுத்தலாம் என தீர்மானித்தால் அப்போதே நிலத்தை நகராட்சி பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுமென்று கூறப்பட்டது.
ஒருவேளை நிலம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என நகராட்சி தீர்மானித்து வேறு இடம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் கொடுத்த இடத்தை திரும்ப கொடுத்து விடவேண்டுமெனவும் அதற்கு பதிலாக ஒரு பெரும் தொகையை நகராட்சிக்கு வழங்குவதாக கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.