சென்னை ஆக, 22
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு களஆய்வு மேற்கொள்ள வரும் அலுவலர்களிடம் ஆதார் வங்கி, புத்தகம் ஆண்டு வருமானம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க தலைவிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.