புதுடெல்லி ஆக, 15
லேப்டாப், கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவில் அதிக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று வர்த்தக செயலாளர் தெரிவித்தார். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பன்முகத்தன்மையை கொண்டு வருவது மட்டுமல்லாமல் பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று கூறினார்.