ராமநாதபுரம் ஆக, 13
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் திமுக தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 17, 18 தேதிகளில் வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தனியார் பெயிண்டர்களும் கருப்பு, வெள்ளை நிற வண்ணங்களை பூசும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.