கடலூர் ஆகஸ்ட், 18
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி அனைத்து வாக்காளர்களும் தாமாக முன் வந்து தங்கள் ஆதார் எண்ணினை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். இணையதள முகவரி மேலும் வாக்காளர்கள் https://www.nvsp.in/என்ற இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1 ம் தேதிகளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே மேற்படி தகுதி நாட்களில் 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என அதில் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.