பெங்களூரு ஆகஸ்ட், 18
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை-துபாய் இடையே கடந்த 2014-ம் ண்டு முதல் மிகப் பெரிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு-துபாய் இடையிலும் இந்த மிகப்பெரிய விமானத்தை இயக்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் முடிவு செய்து உள்ளது. இந்த விமானம் துபாயில் இருந்து வருகிற அக்டோபர் மாதம் 30 ம்தேதி இரவு பெங்களூருவுக்கு வருகிறது.
மேலும் 31 ம்தேதி பெங்களூருவில் இருந்து துபாய்க்கு தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. முதல் வகுப்பில் தனி அறைகள், மசாஜ் சென்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.