புதுடெல்லி ஜூன், 26
ஜூலை 11 ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அசாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தம் கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு, விளையாட்டு அமைச்சகத்துக்கு எதிராக மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், விளையாட்டு அமைச்சகம், தேர்தலை நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளது.