திண்டுக்கல் ஜூன், 26
மணப்பாறை சாலை விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மணப்பாறை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.