கீழக்கரை ஜூன், 11
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் நல்லம்மாள் பணி ஓய்வு பெற்றார்.
அவரது பணியினை பாராட்டி பிரியா விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் அக்பர் அலி மற்றும் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள், மக்தூமியா பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மீராசா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நல்லம்மாள் பணி நிறைவு பெற்றதையடுத்து புதிய தலைமையாசிரியராக லதா ஜாக்குலின் பெக்டஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் அப்பள்ளியின் துணை தலைமையாசிரியராகவும் 33 ஆண்டுகள் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைமையாசிரியருக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.