Spread the love

சென்னை ஆகஸ்ட், 16

தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 18.71 கோடி ரூபாய் செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மே மாதம் 12ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இப்பூங்காவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பாரம்பரிய மரங்கள், பூந்தொட்டிகள், எல்.ஈ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், கலை நயமிக்க சிலைகள், செயற்கை நீரூற்று, ஊட்டச்சத்து தோட்டம், இறகு பந்து மைதானம் போன்ற சிறப்பான வசதிகள் உள்ளன. 2.1 கி.மீ நீளமுள்ள இந்த பூங்காவை அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டிப் பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பூங்காவிற்கு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ஸ்கேட்டிங் பயிற்சி பகுதியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மரக்கன்றையும் முதலமைச்சர் நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *