கீழக்கரை ஆகஸ்ட், 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க மூத்த உறுப்பினரான ஹுப்புர் ரசூல், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் தமது உரையில், விடுதலைப்போராட்ட வீரர்களின் தியாகத்தினை நினைவு கூற வேண்டியதன் அவசியம் குறித்தும், மாணவர்கள் போதைப் பழக்கத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.