கீழக்கரை மே, 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர மன்ற தலைவர் சஹானா சார்பா முத்துசாமிபுரத்தில் தமிழகம் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சமூக சமையலறை கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது நகராட்சி பொறியாளர் அருள், பொதுப்பணி மேற்பார்வையாளர் சாம்பசிவன் உடன் இருந்தனர்.