கீழக்கரை ஏப்ரல், 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று(பதிவு எண் TDR 4357) ராமநாதபுரம் ஜோதி டிராக்டர் ஒர்க்ஷாப்ல் துரு பிடித்த நிலையில் நிற்கிறது.
இந்த வண்டி எப்போது உங்களிடம் வந்தது? எதற்காக வந்தது? என நாம் கேள்விகளை முன்வைத்த போது, எட்டு ஒன்பது மாதத்திற்கு முன்பு தான் பழுது பார்க்க கொண்டு வந்து விட்டார்கள் என்று ஒர்க்ஷாப் பணியாளர் கூறினார்.
இந்த வண்டி விசயமாக அவ்வப்போது யாராவது ஒருத்தர் வருவதும் பார்ப்பதுமாய் போய்க்கொண்டிருக்கின்றனரே தவிர வண்டிக்குரிய செலவின தொகையை தந்து விட்டு வண்டியை எடுத்தபாடில்லை என ஆதங்கப்பட்டார்.
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்குவதும் அதை அப்புறப்படுத்த போதிய வாகனம் இல்லை என்று கூறுவதுமாய் நகராட்சி நிர்வாகத்தின் கடமை முடிந்து விடுகிறதில்லை.
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் வாகனம் விரைவில் மீட்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.