Spread the love

கீழக்கரை ஏப்ரல், 18

புனிதமான ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு கடை பிடிப்பார்கள். இதற்காக அதிகாலை சஹர் நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவை ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை தினமும் 275 நபர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ருசிமிகும் உணவு வழங்குவது தனிச் சிறப்பாகும். தாளிச்சா சோறு, கோழிக்கறி குழம்பு, ஏதேனும் ஒரு கூட்டு, மஞ்ச தேங்கா சோறு, அவித்த முட்டை என பலவகையான உணவுகள் வழங்குவதால் வீட்டில் சாப்பிடும் உணர்வினை நோன்பாளிகள் பெறுகின்றனர்.

மேலும் இந்த உணவு ருசியாகவும் சுத்தமாகவும் இருப்பதால் மக்கள் வயிறார சாப்பிட்டு உணவு கொடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

உணவு வழங்கும் விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கவனித்து வரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை அலுவலர் சித்தீக் காக்காவிடம் நமது நிருபர் தகவல் சேகரித்த போது ரமலான் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவையிலோ, தரத்திலோ எந்த குறையும் வந்து விடக்கூடாது என்பது எங்கள் டிரஸ்டிகளின் கண்டிப்பான உத்தரவு என்பதால் நானே தினமும் இருந்து கண்காணித்து மக்களுக்கு உணவு சென்று சேரும் வரை அமர்ந்திருப்பேன் இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

மக்களின் தேவை உணர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளைக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் நாங்களும் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.

ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்

கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *