கீழக்கரை ஏப்ரல், 18
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் மாவட்டம் மற்றும் நகர் சார்பில் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் சமூக நல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் இஃப்தார், நலத்திட்ட உதவிகளை சமூக நல்லிணக்கமாக கடைபிடிக்கப்பட்டன.
மேலும் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் கோமதி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர் ஆகியோர் பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
முன்னதாக தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி அவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணை தலைவர் மஹசூக் பானு, நமது KLK வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் மௌலவி ஜஹாங்கீர் அரூஸி, முன்னாள் ரோட்டரி கிளப் செயலாளர் சிவகார்த்திகேயன், SDPI கட்சி நிர்வாகிகள் ராஜாமுஹம்மது பாரூக், ஜகுபர் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க நிர்வாகிகளான பெருமாள், முஸம்மில்,முத்துக்குமார், சிக்கந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.