ஜார்கண்ட் ஏப்ரல், 9
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக்கு மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு 50,000 தடுப்பூசிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் ஆனால் எங்களுக்கு தடுப்பூசிகள் வந்து சேரவில்லை” என்று கூறினார்.