ஒரு சிறப்பு தொகுப்பு
கீழக்கரை மார்ச், 27
ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர்.
10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர வேண்டும்!
தற்போது ரமலான் காலம் என்பதால் தர்மம் செய்யும் தனவந்தர்கள் 10 ரூபாய் 20 ரூபாய் நோட்டுகள் கிடைக்காதபட்சத்தில் நாணயங்களை வங்கியில் பெற்றுக்கொண்டு தேடிவரும் ஏழைகளுக்கு 10ரூபாய் 20ரூபாய் நாணயங்களை கொடுக்கின்றனர்.
ஆனால் நாணயங்களை வாங்குவதற்கு ஏழைகள் யாசகம் கேட்போர் தயங்குகின்றனர். காரணம் கேட்டால் நாணயங்களை வியாபாரிகளோ, அரசு பேருந்து நடத்துனர்களோ வாங்குவதில்லை செல்லாதுனு சொல்லி விடுகிறனர். இதனால் இந்த நாணயங்கள் எங்கள் பசியை போக்குவதில் பெரும் சிரமத்தை தருவதாக யாசகம் கேட்போர் கூறுகின்றனர்.
இதுகுறித்து தாஜ்மலர் நிலைய பொறுப்பாளர் முகைதீன் பாரூக் கூறும்போது,
மக்கள் கொண்டு வந்து நாணயங்களை தந்தால் பெற்றுக்கொள்கிறேன் அதே நேரத்தில் நான் திரும்ப மக்களிடம் கொடுத்தால் அவர்கள் வாங்குவதில்லை என்கிறார்.
நாணயங்கள் வெளியாகி பல காலங்களாகியும் இன்னும் கீழக்கரையில் 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை செல்லாதுனு தன்னிச்சையாய் அறிவிக்கும் அதிகாரத்தை பேரூந்து நடத்துனர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு யார் கொடுத்தது?என்னும் கேள்விக்கு மாவட்ட நிர்வாகம் பதில் தருமா?
ஏழை எளிய மக்களின் துயர் நீக்கும் புனித ரமலான் காலங்களில் செல்வந்தர்கள் கொடுக்கும் 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் அங்கீகரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்துவதாக கீழக்கரை சமூக நல ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
ஜஹாங்கீர்,/தாலுகா நிருபர்
கீழக்கரை.