ராமநாதபுரம் மார்ச், 20
ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக சாதனை புரிந்தோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் தலைவர் மானுடப் பிரியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையாவிற்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதும், பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஸா பானுவிற்கு மருத்துவ சேவை விருதும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் கீழக்கரை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தரதிற்கு சிறந்த சமூக சேவகர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.