புதுடெல்லி பிப், 18
டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் பிபிசி அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையை ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் சிங் பேசுகையில், அரசு அமைப்புகளான ஐடி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை மத்திய அரசு தவறாக கையாள்கிறது என்பது பிபிசியின் ஐடி ரெய்டில் தெரிகிறது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.