சென்னை பிப், 6
பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ஆகும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும். இந்நிலையில் பான் ஆதார இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என நேரடி வரிகள் வாரிய தலைவர் நித்தின் குப்தா கூறியுள்ளார். ஒருமுறை பான் கார்டு செயலற்றதாகிவிட்டால் வருமான வரி சட்ட பிரிவுகளின் கீழ் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.