சென்னை பிப், 6
புற்றுநோய் சிகிச்சை நெறிமுறைகள் பற்றி அறிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் சுகாதார செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்ல உள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர், மா. சுப்பிரமணியன் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஜப்பான் முன்னிலையில் உள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் பின்பற்றும் சிகிச்சை நெறிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.