கீழக்கரை பிப், 1
மாநில அளவிலான நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து முதலாவதாக வெற்றி பெற்றதுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதியாக இந்திய பிரதமரை டில்லியில் சந்தித்து உரையாடியவர் மாணவி ஆயிஷத்து ருக்ஷானாவை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் கிழக்குத்தெரு, அர்-ரஹ்மான் அவென்யூ ஷஃப்னா இல்லத்தில் நடைபெற்றது.
மாணவி ஆயிஷத்து ருக்ஷானா அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிழக்குத்தெரு,நம்ம தெரு நட்பு (NTN) வாட்ஸ்அப் குழுமம் சார்பாக YOUNG ENCOURAGEMENT AWARD வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும் பட்டமளிப்பு நிகழ்வில் NTN தலைமை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அயூப்கான் வரவேற்புரை ஆற்றினார். சாஜித் கிராஅத் ஓதினார்கள். பேராசிரியர்.S.M.N. ஆசிஃப் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆய்ஷத்து ருக்ஷானா ஏற்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் NTN ஒருங்கிணைப்பாளர்கள்.இபுராகீம், இக்பால்,அஹ்மது பரீது, சலீம்,நஸீர் அஹ்மது, பேராசிரியர். ஆசிஃப், அபுல் ஹசன்,பாரூக் மரைக்காயர்,சாஜித் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை NTN ஒருங்கிணைப்பாளர்கள். இபுராகீம்,சாஜித், முஹம்மது அயூப்கான் செய்திருந்தார்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.