கள்ளக்குறிச்சி ஜன, 29
சென்னையில் இருந்து 35க்கும் அதிகமான பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் எருமைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் நான்கு மாடுகளும் பலியாகி உள்ளது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.